சிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்

04 ஜூலை 2020, 06:58 PM

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கித் தயாரிக்கும் படம் ப்ரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கிறார். மேலும் நடிகர் அர்ஜூன் இந்தப் படத்தில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகர் சதீஷூம் நடிக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்,  சூப்பர் ஸ்டார் (Superstar Anthem) என்ற படத்தின் முதல் பாடலை என்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.