ஊரடங்கின் போது நடைபெற்ற சன் டிவி சீரியல் நடிகரின் திருமணம் - வெளியான ஃபோட்டோ வைரல்

04 ஜூலை 2020, 06:49 PM

கொரோனா வைரஸ் காரணமாக பிரபலங்களின் திருமணங்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கு பெறும் வகையில் எளிமயான முறையில் நடைபெற்று வருகிறது. திருமண புகைப்படங்களை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பகிர அது வரைலாகி வருகிறது.

இந்நிலையில் சன் டிவியில் கிருஷ்ணா - சாயா சிங் ஜோடியாக நடித்து வந்த 'ரன்' தொடரில் வில்லனாக நடித்து மிரட்டியவர் விஜித் ருத்ரன். இவர திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது வைரலாகி வருகிறது.

அந்த பதிவில், நன்றி உங்களது ஆசிர்வாதங்களுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி. அது இந்த நாளை இன்னும் சிறப்பாக்கியுள்ளது. உங்கள் அன்பை தொடர்ந்து வழங்குங்கள் என்று கேட்டுக்கொண்டார். தற்போது அவரது திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.