கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட வறுமையின் காரணமாக ஆட்டோ ஓட்டும் நடிகை - வெளியான ஃபோட்டோ

04 ஜூலை 2020, 06:42 PM

கொரோனா வைரஸின் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. குறிப்பாக பொழுதுபோக்குத்துறை பெருமளவில் பாதிப்பை சந்தித்துள்ளது.

நடிகர்கள், நடிகைகள் தொடர்ச்சியாக காய்கறிகள் விற்பனை செய்வது, மீன் கடை நடத்துவது போன்ற தொழில்களில் ஈடுபடும் செய்திகள் சமீப காலமாக வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கேரளாவை சேர்ந்த மஞ்சு என்ற மேடை நாடக நடிகை கடந்த 10 வருடங்களாக நடித்து வருகிறார். தற்போது நடைமுறையில் இருக்கும் கொரோனா வைரஸ் ஊரடங்கு அவரை வறுமையில் தள்ளியுள்ளது. இதனால் அவர் ஆட்டோ ஓட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும் ஆட்டோ ஓட்டி கிடைக்கும் பணத்தில் தன் சக நடிகர்களுக்கும் அவர்களின் வீட்டுச்செலவுக்கு உதவி வருகிறாராம்.