டிவி நடிகையைத் தொடர்ந்து, அவருடன் இணைந்து நடித்த நடிகருக்கும் கொரோனா - ரசிகர்கள் அதிர்ச்சி

04 ஜூலை 2020, 06:40 PM

உலக அளவில் சாமான்யர்கள், பிரபலங்கள் என்ற எந்த வித பாகுபாடும் இல்லாமல் கொரோனா வைரஸ் அனைத்து தரப்பினரையும் மிகவும் அச்சுறுத்தி வருகின்றது. இதனையடுத்து பிரபலங்கள் கொரோனா அனுபவங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவுகளாக எழுதி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தெலுங்கு டிவி நடிகை நவ்யா சுவாமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு கொரோனா பாதித்தது குறித்து அறிவித்தார். மேலும் தன்னுடன் பணிபுரிந்தவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவித்தார்.

இந்நிலையில் அவருடன் நடித்து வந்த ரவி கிருஷ்ணா என்ற நடிகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். இதுகுறித்து ரவிகிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். உங்கள் வாழ்த்துகளாலும், கடவுளின் கருணையினாலும் நான் நன்றாக இருக்கிறேன்.

எனக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. எனக்கு யாரிடம் இருந்து வந்தது என்று கவலைப்பட தேவையில்லை. என்னுடன் யார் தொடர்பில் இருந்தீர்களோ அவர்கள் உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். அல்லது பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். ரவி கிருஷ்ணா ஆமே கதா என்ற தொடரில் நடித்து வந்தார். அவருடன் நடித்து வந்த நவ்யா சுவாமிக்கும் கொரோனா பாதித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.