நயன்தாரா போலவே அச்சு அசலாக இருக்கும் பெண்: வைரலாகும் புகைப்படங்கள்

04 ஜூலை 2020, 06:39 PM

பிரபல நடிகர் நடிகைகள் போகவே மேக்கப் போட்டு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்குவது கடந்த சில வருடங்களாகவே ஒரு வழக்கமாக உள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் நயன்தாரா போலவே இருக்கும் பெண் ஒருவர் டிக்டாக்கில் வீடியோவில் பதிவு செய்தார் என்பதும், அந்தப் பெண்ணின் வீடியோ வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது பிரபல மேக்கப் கலைஞர் ஒருவர் இளம்பெண் ஒருவருக்கு நயன்தாராவே போலவே மேக்கப் போட்டு அசத்தியுள்ளார். பட்டு சேலை மற்றும் நகைகளுடன் கூடிய மேக்கப்பில் இருக்கும் அந்தப் பெண் அச்சு அசலாக நயன்தாரா போலவே இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்

ஏற்கனவே இதே பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நயன்தாரா போலவே மேக்கப் போட்ட மேக்கப் ஆர்டிஸ்ட், தற்போது மீண்டும் நயன்தாரா போன்ற மேக்கப் போட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் இடம்பெற்ற நயன்தாரா போலவே இருப்பதாக கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்