ஊரடங்கில் புதிய தொழில் தொடங்கிய வரலட்சுமி சரத்குமார்

04 ஜூலை 2020, 12:13 PM

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி, கடந்த 2012ம் ஆண்டு போடா போடி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்பா வழியில் நாயகியாக மட்டுமின்றி முக்கிய நடிகர்களுக்கு வில்லியாகவும் நடிப்பில் அசத்தி வருகிறார். கூடவே சின்னத்திரை தொகுப்பாளினியாகவும் இருந்தார். இதனாலேயே அவர் கைவசம் அரை டஜனுக்கும் அதிகமான படங்கள் தற்போது உள்ளது. ரிலீசுக்கு தயாராக உள்ள அவர் நடித்த டேனி படம் கொரோனா ஊரடங்கால் தள்ளிப் போய் உள்ளது.

இந்நிலையில் ஊரடங்கால் படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்து வரும் வரலட்சுமி, 'லைப் ஆப் பை' என்ற பெயரில் புதிதாக பேக்கிங் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து வெற்றிகரமாக நடந்தி வருகிறார். சிறு வயது முதலே பேக்கிங் செய்வதில் ஆர்வம் கொண்ட வரலட்சுமி, தற்போது ஒரு தொழிலாகவும் அதனைத் தொடங்கிவிட்டார்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு நான் ஒரு சிறிய பேக்கிங் கம்பெனியை துவங்கினேன். லைப் ஆப் பை - மூலமாக பிரஷ்ஷாக பேக் செய்யப்பட்ட சீஸ் டாட்ட்ஸ்களை செய்து கொடுக்கிறேன். இது ஒரு பொழுதுபோக்கு விஷயமாகத்தான் செய்தேன். தற்போது அது ஒரு சிறிய பிசினஸாக வளர்ந்து இருக்கிறது. தற்போது வரை நான் எதிர்பார்க்காத வகையில் 100 ஆர்டர்களை முடித்துள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்து ஆர்டர் கொடுத்த ஒவ்வொரு நபருக்கும் நான் நன்றி கூறிக் கொள்கிறேன் என தனது புதிய தொழில் பற்றி வரலட்சுமி மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.