சமந்தாவை ஸ்பைடர்மேன் லெவலுக்கு கொண்டு சென்ற ரசிகர்கள்!

03 ஜூலை 2020, 05:08 PM

திருமணத்திற்கு பின்னரும் மாஸ் நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகை சமந்தா, தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த லாக்டவுன் விடுமுறையை உருப்படியாக செலவு செய்யும் மிகச் சிலரில் சமந்தாவும் ஒருவர். லாக்டவுன் நேரத்தில் வீட்டிலேயே விவசாயம் செய்வது, கணவருடன் இணைந்து யோகா பயிற்சி செய்வது என உருப்படியான விஷயங்களை செய்து வரும் சமந்தா, அவ்வப்போது அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிடுவார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் யோகா செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். ஸ்பைடர்மேன் ஸ்டைலில் இருந்த அந்த படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் மீம் கிரியேட்டர்கள் சமந்தாவின் அந்த புகைப்படத்தை ஸ்பைடர்மேன் போஸ்டர் போன்றே வடிவமைத்து மீம்ஸ் உருவாக்கியுள்ளனர். இந்த மீம்ஸ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் சமந்தாவும் இந்த மீமை ரசித்துள்ளார். மேலும் ’மற்றவர்களை பார்த்து நாம் சிரிக்கும் போது, நம்மைப் பார்த்து சிரித்து கொள்ளவும் பழகிக் கொள்ள வேண்டும்’ என்ற கேப்ஷனை இந்த மீமுக்கு சமந்தா கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.