வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் திரைப்படத்தில் கிட்டத்தட்ட முழு நிர்வாண கோலத்தில் அமர்ந்திருக்கும் நடிகர் அல்லரி நரேஷ் போஸ்டர்!

30 ஜூன் 2020, 07:22 AM

தமிழில் சமுத்திரக்கனி இயக்கிய போராளி திரைபடத்தில் சசிகுமாரின் நண்பராக நடித்தவர் நடிகர் அல்லரி நரேஷ்.

தெலுங்கு சினிமாவின் ஹீரோ, -காமெடி நடிகரான அல்லரி நரேஷ், தற்போது தான் நடித்துவரும் 'நாந்தி' என்கிற படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். 

தற்போது இவர் வெளியிட்டுள்ள போஸ்டரில் கிட்டத்தட்ட முழு  நிர்வாண கோலத்தில் இவர் அமர்ந்திருக்கும் காட்சி பரபரப்பை கிளப்பியுள்ளது. இன்று (ஜூன்-30) இந்தப்படத்தின் முதல் தாக்கத்தை நீங்கள் உணர்வீர்கள் எனக் கூறியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.