ராயப்பன் கேரக்டரில் விஜய் நடிக்க சுஷாந்த்சிங் தான் காரணம்: அர்ச்சனா கல்பாதி

29 ஜூன் 2020, 05:18 PM

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தனது வீட்டில் மன அழுத்தம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ’பிகில்’ படத்தில் இடம்பெற்ற ராயப்பன் என்ற கேரக்டரில் விஜய் நடிப்பதற்கு சுஷாந்த்சின் தான் காரணம் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

’பிகில்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த போது ’ராயப்பன்' கேரக்டரில் நடிக்க முதலில் விஜய் அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றும் அந்த கேரக்டருக்காக ஒரு சிலரை பரிசீலனை செய்து கொண்டிருந்ததாகவும் கூறினார்.

அப்போது மும்பையில் இருந்து வந்திருந்த காஸ்மெட்டாலஜிஸ்ட் ஒருவர் சுஷாந்த் சிங் நடித்து வரும் Chhichhore என்ற படத்தில் அவருடைய இரண்டு கேரக்டர் குறித்த புகைப்படங்களை காண்பித்தார்கள். அந்த புகைப்படங்களை பார்த்த பின்னர்தான் ராயப்பன் கேரக்டரிலும் ஏன் விஜய் நடிக்க கூடாது என்ற ஐடியா எனக்கும் அட்லிக்கும் வந்தது.

அதன் பின் விஜய்க்கு ராயப்பன் கேரக்ரின் டெஸ்ட் எடுத்துப் பார்த்தபோது பிரமாதமாக இருந்தது. இதனை அடுத்து தான் விஜய் அந்த கேரக்டரில் நடித்தார். விஜய்யும் வயதான கேரக்டரில் இதுவரை நடிக்கவில்லை என்பதால் அந்த கேரக்டர் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்று கூறியுள்ளார்.

பிகில் படத்தில் விஜய் நடித்த ராயப்பன் கேரக்டருக்கு சுஷாந்த்சிங் தான் காரணம் என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.