ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ரஜினி!

29 ஜூன் 2020, 08:01 AM

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வசித்த ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையிலேயே மர்ம மரணம் அடைந்தனர். காவல்துறையினர் அடித்ததில் அவர்கள் உயிரிழந்தார்கள் என சொல்லப்பட்ட இந்த சம்பவம் மக்களிடையே பரபரப்பின் உச்சிக்கே சென்று விட்டது.

சமூக ஆர்வலர்கள், திரைப்படத் துறையினர், என பல்வேறு தரப்பினரும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து வருவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். பல நடிகர்களும் கண்டனம் தெரிவித்த இந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஜினி, அவர்களிடம் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.


இந்த தகவலை ரஜினியின் மக்கள் தொடர்பாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.