ஜூலை 10 ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாகும் யோகிபாபு திரைப்படம்!

29 ஜூன் 2020, 07:45 AM

அறிமுகஇயக்குனர் முருகன் யோகி பாபு வை வைத்து இயக்கியுள்ள திரைபடம் `காக்டெய்ல்'. 

இதில் யோகிபாபுவுடன், சாயாஜி ஷிண்டே நகைச்சுவை கலந்த இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்துள்ளார். 

இவர்களுடன் மனோபாலா, மைம்கோபி, சாமிநாதன், யோகி பாபுவின் நணபர்களாக ரமேஷ், மிதுன், டி.வி. புகழ் பாலா குரேஷி ஆகியோரும் நடித்துள்ளார்கள். 

`காக்டெயில்' என்ற பறவையும் முக்கிய கதாபாத்திரத்தில் இத்திரைப்படத்தில் நடித்துள்ளது.

`மதுரை வீரன்' படத்தின் இயக்குனரும், லிசா, டேனி ஆகிய படங்களின் தயாரிப்பாளருமான பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா, இந்த படத்தை தயாரித்துள்ளார்.

மார்ச் 20-ந் தேதி வெளியிட இருந்த இத்திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இந்நிலையில், இப்படத்தை திரையரங்குக்கு பதிலாக நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 10-ந் தேதி ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது.