நயன்தாராவின் சொந்த வாழ்க்கை பற்றியும் அதிகம் தெரியும்…அசுரன் நடிகையின் பாராட்டு!

06 ஜூன் 2020, 06:28 PM

அசுரன் புகழ் நடிகை மஞ்சு வாரியார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசும்போது நயன்தாராவை வியந்து பாராட்டி உள்ளார் அவர். கடந்த பல வருடங்களாக நயன்தாரா நடித்து வரும் படங்கள் அனைத்தும் தான் பார்த்ததாகவும், அவரது படங்களுக்காக அவர் அர்ப்பணிப்புடன் இருப்பதை பார்த்து வியந்ததாகவும் தெரிவித்துள்ளார். சினிமா துறையில் பெண்களும் வலிமையாக நிலைத்து நிற்க முடியும் என காட்டியவர் நயன்தாரா தான் என்றும் அவர் பாராட்டியுள்ளார். மேலும் நயன்தாராவின் சொந்த வாழ்க்கை பற்றியும் அதிகம் தெரியும் என்றும் இருப்பினும் அவரை அதிகம் பிடிக்கும் என்றும் மஞ்சூ வாரியார் கூறியுள்ளார். மஞ்சு வாரியரும் நயன்தாரா போலவே மலையாளத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார்