மகளின் உடையை போட்டு கொண்டு கொட்டாச்சி டான்ஸ்! வைரலாகும் வீடியோ!

03 ஜூன் 2020, 03:14 PM

நடிகர் விவேக்குடன் காமெடி காட்சிகளில் அவ்வப்போது தலை காட்டி வந்தவர் நடிகர் கொட்டாச்சி. இன்று அவருடைய மகள் மானஸ்விக்காக குழந்தை நட்சத்திரமாக கலக்கி வருகிறார்.மானஸ்வி  அவ்வளவு அழகு, அதனால்  இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவிற்கு மகளாக நடித்து பெருமளவில் பிரபலமான குழந்தை மானஸ்வி அனைவரது பேவரைட் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். " சொட்ட சொருகிடுவேன்" என்ற அந்த படத்தில் இடம்பெற்ற அவரது டயலாக்கை திரையில் காண வேண்டும் என பலரும் படத்தையெடுத்தனர்.

கொட்டாச்சி பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், அழகிலும் , திறமையிலும் , நடிப்பிலும் அப்பாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார் மானஸ்வி. தற்போது திரிஷாவின் பரமபத விளையாட்டு திரைப்படத்தில் வாய் பேச முடியாத, காது கேளாத குழந்தை நடித்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் அப்பாவுடன் நேரத்தை செலவிட்டு வரும் மானஸ்வி தனது உடையை அப்பாவும் அவரது உடையை தானும் போட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கியுள்ளார்.

https://www.instagram.com/p/CA5hbsPAC-r/?utm_source=ig_web_copy_link