மாதவன் பதில் அளித்ததால் மகிழ்ச்சியின் பூரிப்பில் அதுல்யா ரவி!

03 ஜூன் 2020, 07:29 AM

தமிழ் சினிமாவில் பலரின் மனம் கவர்ந்த ஹீரோவாக இருப்பவர் நடிகர் மாதவன். அவர் நாயகனாக அறிமுகமான 'அலைபாயுதே' படம் வெளிவந்து 20 வருடங்களாகிவிட்டது. ஆனால் அந்த நினைவுகள்தான் ரசிகர்கள் மத்தியில் இன்னும் நிலை வருகிறது.


மாதவன் நேற்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு சினிமா பிரபலங்கள், குறிப்பாக பல நடிகைகள் மறக்காமல் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். அவர்களில் வளரும் நடிகையான அதுல்யா ரவியும் ஒருவர்.

வாழ்த்து கூறிய அனைவருக்கும் தனித்தனியே பதிலளித்த நடிகர் மாதவன் அதுல்யா ரவிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மாதவனிடமிருந்த நன்றி வந்ததையடுத்து 'இன்று அதிகமான மகிழ்ச்சியான நாள்' என அதுல்யா டுவீட் செய்துள்ளார்.