தமிழ் ராக்கர்ஸ் இல் வெளியான பொன்மகள் வந்தாள்...அதிர்ச்சியில் சூர்யா ஜோதிகா

29 மே 2020, 01:40 PM

தமிழ் சினிமாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் எனும் பைரஸி இணைய தளம் தான். பெரிய படங்கள் முதல் சிறிய படங்கள் வரை அனைத்தையும் படம் வெளியான முதல் நாளே வெளியிட்டு அனைவரையும் பயமுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (மே 29-)) அமேசன் பிரைம் இல் வெளியாக இருந்த ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை அதற்கு முன்னரே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதுள்ளது. தமிழ் ராக்கர்ஸ்.

இதனால் சூர்யாவும் ஜோதிகாவும்  மிகவும் அப்செட் ஆக இருக்கிறார்களாம்.

 படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்தால்தான் திருட்டுத்தனமாக கேமராவை வைத்து காப்பி பண்ணி வெளியிடுகிறார்கள் என்றால் இணைய தளத்திலும் இப்போது புதுப்படங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

அடுத்த கட்டமாக பைரஸி தளங்களில் வெளியான பொன்மகள் வந்தாள் படத்தை நீக்கும் பணியில் இறங்கியுள்ளதாம் படக்குழு.