விஜய்யை வைத்து சரித்திர திரைப்படத்தை நிச்சயம் எடுப்பேன் - சசிகுமார்

29 மே 2020, 07:39 AM

சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். 

சமீபகாலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சசிகுமார் நாடோடிகள், குட்டிப்புலி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். விஜய்யை வைத்து சரித்திர கதையசம் கொண்ட படத்தை இயக்க சில ஆண்டுகளுக்கு முன் சசிகுமார் முயற்சித்தார். ஆனால் சில காரணங்களால் அந்தப்பட வேலைகள் தொடங்கவில்லை.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டியொன்றில் விஜய்யை வைத்து சரித்திர படத்தை எடுப்பேன் என்று சசிகுமார் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறியதாவது: “எனக்கு வரலாற்று காலத்து உடைகள் அணிந்து சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில்லை. ஆனால் வரலாற்று கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளேன். இத் திரைப்படத்தின் கதையை விஜய்யிடம் சொல்லிய போது விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தது. நடிக்க சம்மதித்தார். ஆனால் வேறு சில காரணங்களால் படப்பிடிப்பு நடக்கவில்லை. படத்துக்கான பட்ஜெட் அதிகமாக இருந்தது. வருங்காலத்தில் கண்டிப்பாக அந்த படத்தை விஜய்யும் நானும் சேர்ந்து எடுப்போம்“ என்று சசிகுமார் கூறினார்.