அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும் விராட் கோலி - பிஜேபி எம்எல்ஏ

29 மே 2020, 06:47 AM

ஹிந்தி திரையுலகின் பிரபல நடிகையான அனுஷ்கா ஷர்மா, பிரபல கிரிக்கெட் வீரரும் இந்திய அணி கேப்டனுமான விராட் கோலியை திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவிலிருந்து சற்று விலகியே இருக்கிறார். 

இந்நிலையில் சமீபத்தில், கிளீன் சிலேட் பிலிம்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி, தற்போது பாதல் லோக் என்கிற வெப்சீரிசை தயாரித்து வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த வெப்சீரிஸில் குறிப்பிட இன மக்களை அவமானப்படுத்திவிட்டார் என அனுஷ்கா சர்மாவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்தநிலையில், உத்தரபிரதேச பிஜேபி எம்.எல்.ஏ.வான நந்திகிஷோர் குர்ஜார் என்பவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அனுஷ்கா சர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸில் புகார் அளித்துள்ளார்.

மேலும், இது குறித்து பேசிய அவர் "இந்தியாவுக்காக தன்னை அர்ப்பணித்து விளையாடும் தியாகியான விராட் கோலி, அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்யவேண்டும்” என்றும் கூறி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.