முறுக்கு வியாபாரம் செய்யும் பிரபல டி.வி தொகுப்பாளினி!

23 மே 2020, 10:25 AM

தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் மணிமேகலை. சமீபத்தில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்குபெற்று மிகவும் பிரபலமடைந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன அமைப்பாளர் உசேன் என்பவரை திருமணம் செய்து கொ ண்டார். கொரோனா ஊரடங்கு காரணமாக கிராமத்தில் இருவரும் மகிழ்ச்சியாக இந்த நாட்களை கழித்து வந்தனர்.
அவர் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். கிராமத்தில் இருக்கும் ஒரு அம்மாவுடன் சேர்ந்து  முறுக்கு கடை ஆரம்பித்துள்ளார். அவர் கையால் முறுக்கு சுடுகிறார். மேலும் கடைக்கு 'மணிமேகலை முறுக்கு கடை' என்று பெயர் வைத்துள்ளனர். பார்ப்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த வீடியோவில் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.