மருத்துவமனைக்கு வந்த தல அஜித் ? - வெளியான வீடியோ - எதற்காக இந்த விசிட் ?

22 மே 2020, 08:30 PM

வழக்கமாக தல அஜித் பொது நிகழ்வுகளில் பெரிதும் கலந்து கொள்வதில்லை. இதன் காரணமாக அவர் பற்றிய செய்திகள், அவரது புகைப்படங்கள் ஏதாவது ஒன்று வெளியானால் மின்னல் வேகத்தில் தல ரசிகர்கள் அவற்றை வைரலாக்கி விடுவர்.

அந்த வகையில் தல அஜித் மருத்துவமனையில் மாஸ்க் அணிந்த படி இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து 'எதற்காக அவர் மருத்துவமனை சென்றார் ?' என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இதனையடுத்து எங்கள் தரப்பில் அந்த ஃபோட்டோ குறித்து விசாரிக்கையில் தல அஜித் தனது மனைவி ஷாலினியின் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளாராம். இதுகுறித்து கவலைகொள்ள தேவையில்லை என்றும் பரிசோதனைக்கு பிறகு பாதுகாப்பாக இருவரும் வீடு திரும்பினர் என்பதும் தெளிவானது.