மாஸ்டர் படத்தின் தற்போதைய நிலவரம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

22 மே 2020, 03:48 PM

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளும் இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் திரையரங்கு விநியோக உரிமைகளைப் பெற்றுள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ - மாஸ்டர், கோப்ரா உள்ளிட்ட படங்களின் தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரபூர்வத் தகவல் வெளியிட்டுள்ளது. ட்விட்டரில் தெரிவித்ததாவது:

மாஸ்டர் படம் - படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் நடைபெற்று வருகின்றன.

விக்ரம் நடிக்கும் கோப்ரா - 90 நாள்கள் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இன்னும் 25% படப்பிடிப்பு மீதமுள்ளது.

விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் - 35 நாள்கள் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இன்னும் 40 நாள்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது.

விஜய் சேதுபதி நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் - ஆகஸ்ட் முதல் படப்பிடிப்பு தொடங்கும்.இவ்வாறு இந்த நான்கு படங்களின் தற்போதைய நிலவரங்களை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ வெளியிட்டுள்ளது.