அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் மீது கடுப்பாகி போன சூர்யா!

22 மே 2020, 12:41 PM

தன்னுடைய ஆஸ்தான இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் சூர்யா அருவா படத்தில் நடிக்க உள்ளார்.ஆனால் இந்த கால்ஷீட்டில் முதன்முதலில் கமிட் ஆனவர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சிறுத்தை சிவா.

சிறுத்தை சிவா தற்போது ரஜினியை வைத்து அண்ணாத்த  படத்தை இயக்கி வருகிறார். ஆனால் இந்த படத்திற்கு முன்னரே சூர்யாவுடன் கூட்டணி சேரப் போவதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா அறிவித்திருந்தார்.

இதனால் பெரிதும் நம்பிக்கையிலிருந்த சூர்யா, ரஜினி பட வாய்ப்பு கிடைத்தவுடன் சிறுத்தை சிவா எஸ்கேப் ஆனதால் வருத்தத்தில் உள்ளாராம். இதனால் சிவாவின் மீது இருந்த நம்பிக்கை குறைந்து விட்டது என்கிறது சூர்யா வட்டாரம்.

 ஒரே ஒரு ஹிட்டிற்காக காத்திருக்கும்  சூர்யாவுக்கு தானாகவே வந்து கதை சொல்லி ஓகே பண்ணியவர்தான் சிறுத்தை சிவா. அதன்பிறகு நம்பிக்கையை கொடுத்து விட்டு பிரிந்து சென்றது சூர்யாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையாம்.

சூர்யா அருவா படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். அதன் பிறகு இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.