உணவின்றி தவிக்கும் விலங்கினங்களுக்கு உணவளியுங்கள் - சோனியா அகர்வால்

06 ஏப்ரல் 2020, 08:34 AM

தனுஷுடன் இணைந்து காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால்.

இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில், மனிதர்கள் மட்டுமல்ல, பிராணிகளும் பிரச்னையை எதிர்கொண்டிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

மேலும், ''உணவின்றி தவிக்கும் பறவைகள், விலங்குகளுக்கு உணவு கொடுங்கள்,'' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.