கரோனா வைரஸ் தொற்றால் நடிகர் மரணம்

02 ஏப்ரல் 2020, 02:20 PM

கரோனா வைரஸ் தொற்றால் ஸ்டார் வார்ஸ் நடிகர் ஆண்ட்ரூ ஜாக் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 76.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 40,000 மக்கள் இறந்துள்ளார்கள்.

இந்நிலையில் ஸ்டார் வார்ஸ் படத்தில் நடித்த நடிகரான ஆண்ட்ரூ ஜாக், கரோனா வைரஸ் தொற்றால் சமீபத்தில் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இங்கிலாந்தில் உயிரிழந்துள்ளார். ஸ்டார் வார்ஸ் படத்தில் நடித்துக் கவனம் பெற்ற ஆண்ட்ரூ ஜாக், நடிப்பு தொடர்புடைய பயிற்சியாளராகவும் பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார்.