கரோனா வைரஸ் தொற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ஆங்கிலப் படம்

02 ஏப்ரல் 2020, 02:07 PM

கரோனா வைரஸ் தொற்றை மையமாகக் கொண்டு கரோனா என்கிற சுயாதீன படமொன்றை எடுத்துள்ளார் கனடாவைச் சேர்ந்த மொஸ்தஃபா கேஷ்வரி.


சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 47,000 மக்கள் இறந்துள்ளார்கள்.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றை மையமாகக் கொண்டு கரோனா என்கிற சுயாதீன படமொன்றை எடுத்துள்ளார் கனடாவைச் சேர்ந்த மொஸ்தஃபா கேஷ்வரி. ஒரு மின்தூக்கியில் மாட்டிக்கொண்ட ஏழு பேரும் கரோனா குறித்த அச்சத்தில் இருப்பதைக் கண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார். அந்த மின்தூக்கியில் ஒரு சீனப் பெண் இருப்பதால் அவர் மூலம் கரோனா பரவும் என மற்றவர்கள் அச்சப்படுவதுதான் படத்தின் மையக்கதை.

நான் மின்தூக்கியில் இருந்தபோது சீனப் பயணிகள் தாக்கப்பட்ட செய்தியைப் படித்தேன். அப்போதுதான் மின்தூக்கியில் இக்கதையை எடுக்கவேண்டும் என முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார் கேஷ்வரி.