இதை செய்யுங்கள் உலகில் மாற்றம் வரும் - அமலாபால்

02 ஏப்ரல் 2020, 01:55 PM

அமலாபால் நடிப்பில் தற்போது அதோ அந்த பறவை போல திரைப்படம் உருவாகி உள்ளது. கே.ஆர்.வினோத் இயக்கியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து அமலாபால் கூறியிருப்பதாவது:- “கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பொதுமக்களுக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டு இருக்கலாம். இந்த இக்கட்டான நேரத்தில் உங்களை சுற்றி இருக்கும் மக்களுக்கு உதவியாக இருங்கள். பால்காரர், வாட்ச் மேன், டிரைவர்களுக்கு உதவி செய்யுங்கள். முன்னாள் பணியாளர்கள் நன்றாக இருக்கிறார்களா? என்று விசாரியுங்கள். எதை சரி என்று நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள். இதன் மூலம் உலகில் மாற்றம் வரும்” இவ்வாறு கூறியுள்ளார்.