கேலி செய்தவருக்கு பதிலடி !

01 ஏப்ரல் 2020, 01:51 PM

கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தினால் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டில் இருப்பதன் அவசியம் குறித்து நடிகை, நடிகைகள் பலர் சமூக வலைதளங்களின் வாயிலாக அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

நடிகை மஞ்சிமா மோகனும் தன் பங்குக்கு அறிவுரை வழங்கி டுவீட் செய்தார். அப்போது நெட்டிசன் ஒருவர், மஞ்சிமாவின் உருவத்தை கேலி செய்யும் வகையில் கமெண்ட் செய்தார். அதற்கு பதில் அளித்த மஞ்சிமா, இதுபோன்ற மக்களும் நம்முடன் தான் இருக்கிறார்கள். வழக்கமாக இதுபோன்ற கமெண்ட்களுக்கு நான் பதில் அளிப்பது இல்லை. மக்களை வீட்டில் இருக்க சொன்னதற்கு, எனக்கு கிடைத்த பலன் இதுதான். வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருப்பது எளிதானது என நீங்கள் நினைப்பது தவறு சகோதரா. நமக்கு வானத்தில் இருந்து பணம் கொட்டாது, என அவர் தெரிவித்துள்ளார்.