சிம்புவுக்கு வில்லனாகும் ஆர்யா?

26 மார்ச் 2020, 03:40 PM

மிஸ்கின் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், சமீபத்திய தகவலின் படி, அரிமா நம்பி, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க  ஆக்ஷன் படமாக உருவாக உள்ள இதில், ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளதாகவும்  சொல்லப்படுகிறது.