ரகுல் பிரீத் சிங் வழக்கத்துக்கு மாறாக வேடத்தில் நடிக்க உள்ளார்

25 மார்ச் 2020, 12:26 PM

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை ரகுல் பிரீத் சிங். ‘தடையற தாக்க’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் நல்லவிதமாக அமைந்தது. கார்த்தியுடன் தொடர்ந்து ‘தேவ்’ படத்திலும், சூர்யாவுடன் ‘என்.ஜி.கே’படத்திலும் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தற்போது கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்திலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்திலும் நடித்து வருகிறார். கோலிவுட்டை போல் பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வரும் ரகுல் பிரீத் சிங், அடுத்ததாக அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வழக்கமாக பாலிவுட்டில் கவர்ச்சி மற்றும் ரொமாண்டிக் வேடங்களில் நடித்து வந்த ரகுல் பிரீத் சிங், இப்படத்தில் காமெடி கலந்த ஹிரோயின் வேடத்தில் நடிக்கிறாராம். இப்படத்தை இந்திரகுமார் இயக்க உள்ளார்.