கொரோனாவை பற்றி ஒரு குட்டி ஸ்டோரி சொல்லும் ஹர்பஜன் சிங்…!

25 மார்ச் 2020, 12:09 PM

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதிவரை ஊடரங்கு சட்டத்தை நேற்றிலிருந்து பிரதமர் மோடியின் தலைமையில் அமல் படுத்தப்பட்டது. இந்தியாவில் சுயதனிமைப்படுத்துதலை கைப்பிடித்து விட்டால் 62 சதவீதம் பாதிப்பை எளிதில் தடுத்துவிடலாமென்று ICMR வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் சுய தனிமைப்படுத்துதலைப்பற்றி இந்தியாவில் பல கிரிக்கெட் சினிமா பிரபலங்கள் அவரர்களுடைய பாணியின் விழிப்புணர்வை வெளிக்காட்டி அதனை இணையதளத்தில் பதிவிட்டு பகிர்ந்துவருகின்றனர். அதன் வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் ” குட்டி ஸ்டோரி” பாணியில் கொரோனாவைப்பற்றி ஒரு குட்டி ஸ்டோரியை கூறியுள்ளார்.“Let me tweet a குட்டிstory,Pay attention listen2 @PMOIndia தடைகளை உடைச்சு WorldCup, Oscarன்னு வாங்கின நமக்கு, கண்ணுக்குத்தெரியாத #Corona ஒரு சவால்.இதை #21daysoflockdown ல் ஜெய்ச்சு உலகத்துக்கு முன்னாடி கெத்தா காலரதூக்குரதுக்காக #StayAtHomeSaveLives @CMOTamilNadu @Vijayabaskarofl” என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.