என் வீட்டை தருகிறேன் - பார்த்திபன்

24 மார்ச் 2020, 07:18 PM

நடிகர் பார்த்திபன் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், இப்படி உலகம் முழுக்க இந்த கொரோனா நோய் பரவி வருகிறது. 24 மணி நேரமும் இதை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதால் எனக்கு ஒரு யோசனை வருகிறது.

24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனைகளை நாமே உருவாக்கணும். அதாவது இரண்டு வீடுகள் இருந்தால் அதில் ஒன்றை இந்த கொரோனா மருத்துவமனையாக கொடுக்க முன் வரலாம் . எனக்கு 3 பிளாட் இருக்கு அதையும் கொடுக்க தயார்.

அதுபோல தெருவுக்கு தெரு இப்படி பட்ட மருத்துவ வசதி செய்து கொள்வது பெரிய உதவியாயிருக்கும்" என்று கூறியுள்ளார்.