உடல்நலக்குறைவால் நடிகர் விசு காலமானார்..!

22 மார்ச் 2020, 06:17 PM

சென்னை,

இயக்குனரும், நடிகருமான விசு. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால்  பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 74.

விசு தமிழ்த் திரைப்பட டைரக்டர், தயாரிப்பாளர், கதாசிரியர், மற்றும் நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் ஆவார். 1941-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். 

தமிழ் திரைப்பட உலகில் குடும்ப கதாபாத்திரங்கள் நிறைந்த திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் விசு. இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் பல இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட புகழை பெற்ற திரைப்படம்.

மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான அரட்டை அரங்கம் மூலம் உலக மக்கள் அனைவரிடமும் பிரபலமடைந்தவர். 

இவர் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக, சிகிச்சை பெற்று வந்த விசு, இன்று மாலை 5.30 மணிக்கு  காலமானார்.