மன்னிப்பு கேட்டால் சின்மயி சேர்ந்து கொள்ளலாம் இல்லையேல் வழக்கு தான் - ராதாரவி

16 பிப்ரவரி 2020, 01:23 PM

அதிக பரபரப்பில் இருந்த தமிழ் திரையுலக டப்பிங் சங்க தேர்தலில் நடிகர் ராதாரவியை எதிர்த்து போட்டியிட்டார் பிரபல பின்னணி பாடகி சின்மயி. அப்போது இவரது மனு நிராகரிக்க பட்டதால் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார் ராதாரவி. 


மேலும் துணை தலைவர், பொருளாளர், செயலர்லர், செயற்குழு உறுப்பினர் போன்ற எல்லா பதவிகளுக்கும் இன்று தேர்தல் நடத்தப்பட்டது. இன்று மாலை 5 மணி அளவில் வரை இந்த வாக்கு பதிவு நடைபெற்றது. இந்த வாக்குபதிவின் முடிவுகள் இன்று இரவுக்குள் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியிருக்கும் நிலையில் இன்று தேர்தல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ராதாரவி, பேசும் போழுது “இந்த டப்பிங் சங்க நலனுக்காக பல உதவிகளை செய்ய உள்ளேன்.

மேலும் சின்மயி மன்னிப்பு கேட்டால் நங்கள் அவரை சேர்த்து கொள்ளவோம். இதன்பின்னும் அவர் எங்கள் மீது தவறான குற்றசாட்டை தெரிவித்து வந்தால், அவர் மீது வழக்கு தொடருவோம்” என்று சொல்லியிருக்கிறார்.