வெளிநாட்டில் பிரமாண்டமாக தயாராகும் சூரி படம்

16 பிப்ரவரி 2020, 09:00 AM

அசுரன் படத்திற்கு பின்னர் இந்த படத்தை இயக்கவிருக்கும் வெற்றிமாறன் இந்த படத்திற்காக 150 அறைகள் கொண்ட ஒரு வீட்டை தமிழகம் முழுவதும் தேடி பார்த்தாராம். ஆனால் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலேயே 150 அறைகள் கொண்ட அவர் எதிர்பார்த்த வீடு இல்லை என்பதை உறுதி செய்த பின் தற்போது வெளிநாட்டில் இந்த பிரமாண்டமான வீட்டை செட் போட முடிவு செய்திருக்கிறாராம்

மேலும் இந்த படத்தில் சூரியை தவிர ஒரு முக்கிய பெரியவர் கேரக்டர் இருப்பதாகவும் அந்த கேரக்டரில் நடிக்க ஒரு சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அனேகமாக ராஜ்கிரண் இந்த கேரக்டரில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.