வெற்றிமாறன் ஜெயித்துவிட்டார் - வெயில் இயக்குனர்

16 பிப்ரவரி 2020, 08:58 AM

இயக்குனர் வசந்தபாலன் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர். இவர் கடைசியாக இயக்கிய காவியதலைவன் படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும் வியாபார ரீதியாக தோல்வி அடைந்தது அதற்கு பிறகு நீண்ட நாட்கள் கடின முயற்சிக்கு பிறகு தற்போது இவர் ஜெயில் படத்தை இயக்கி வருகிறார்.

பிப்ரவரி 13 மாபெரும் இயக்குனரான பாலு மஹேந்திரா மறைந்த தினம். இதனால் பாலு மஹேந்திரா பெயரில் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு இந்த நாளில திறக்கப்பட்டது. இதில் பல பிரபலங்கள் பேசி தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் தான் வெக்கை நாவலை படமாக்க நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்ததாகவும் ஆனால் நான் உட்பட பலரால் அதை செய்ய முடியவில்லை. சாதிக்க முடியாத ஒன்றை வெற்றி, சாதித்து விட்டார் என வாழ்த்து கூறினார் வசந்தபாலன் .

வெற்றிமாறன் அடுத்ததாக வாடிவாசல் படத்தை இயக்குகிறார் அதில் வாய்ப்பு கிடைத்தால் நான் உதவி இயக்குனராக சேர்ந்து விடுவேன் அந்த அளவுக்கு எனக்கு வெற்றி எப்படி நாவலை திரைக்கதையாக்கி படமாக்குகிறார் என்ற விதத்தை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன் என கூறினார்.