பிக் பாஸ் புகழ் வனிதாவை துரத்தி துரத்தி காதலித்த நடிகர் யார்?

15 பிப்ரவரி 2020, 12:25 PM

நடிகர் விஜய்-யுடன் சந்திர லேகா படத்தில் அறிமுகமானவர் நடிகை வனிதா விஜயகுமார்.சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தனது இரண்டு மகள்களோடு வசித்து வருகிறார்.

இந்நிலையில் காதலர் தின ஸ்பெஷலாக இணையத்தள ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், என்னுடைய காதல் 14 வயதில் தொடங்கியது. நான்காவது படித்த குட்டி பையன் என்னை துரத்தி துரத்தி காதலித்தான். நான் இதை வீட்டில் சொன்னேன். எல்லாரும் ஆடி போயிட்டாங்க தற்போது அவர் சினிமாவில் தான் நடித்து வருகிறார். அவர் பெயரை சொல்ல நான் விரும்பவில்லை. எனக்கு வந்த முதல் காதல் அது தான் என் கூறியிருந்தார். அந்த நடிகர் யார் என்று அவருக்கு தான் தெரியும் என நெட்டிசன்கள் புலம்புகின்றனர்.