காதலர்களுக்கு வைரமுத்து வின் கிஃப்ட்.

14 பிப்ரவரி 2020, 11:33 AM

கவியரசு வைரமுத்து அவர்கள் தனது ட்விட்டர் தளத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு ஒரு கவிதையை எழுதியுள்ளார்.

இந்த கவிதை தற்போது இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கவியரசு வைரமுத்து எழுதிய காதல் கவிதை இதுதான்:

காதலும் பசியும்

காணாது போயின்

பூதலம் மீது

புதுப்பித்தல் ஏது?

வெற்றியில் தோல்வியாய்

தோல்வியில் வெற்றியாய்ப்

பற்றிடும் காதலே

பற்றுக பற்றுக!