இன்று மாலை 5 மணிக்கு மாஸ்டரின் "ஒரு குட்டி கதை" அதற்கு முன் ஒரு குட்டி செய்தி!

14 பிப்ரவரி 2020, 08:51 AM

மீண்டும் இணையும் விஜய்-அருண்ராஜா காமராஜ் தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 65' திரைப்படத்தை இயக்குபவர் யார் என்பது குறித்த நீண்ட பட்டியல் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும். அவற்றில் ஒருவர் 'கனா' படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் என்ற செய்தியும் வெளியானது

இந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் சிங்கிள் பாடலான 'ஒரு குட்டி கதை' என்ற பாடல் இன்று காதலர் தினத்தன்று  5 மணிக்கு வெளிவர உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள இந்த பாடலை எழுதியது அருண்ராஜா காமராஜ் தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. படக்குழுவினர் கொடுத்த ஒருசில தகவல்களின் அடிப்படையில் ரசிகர்கள் இதை கண்டுபிடித்து உள்ளனர் என்பதும் இதனை படக்குழுவினர் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.