யோகி பாபுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித்!

14 பிப்ரவரி 2020, 08:42 AM

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கும் மஞ்சுபார்கவி என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் ரகசிய திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அவருக்கு திருமணப் பரிசாக இப்போது அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் அஜித் இப்போது ஹெச் வினோத் இயக்கும் வலிமைப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தில் அவர் காவல் துறை அதிகாரியாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய தகவல் எதுவும் வெளிவராமல் ரகசியமாக இருக்கும் வேளையில் இப்போது யோகி பாபு இந்த படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.