ஆபாச வீடியோக்களை பார்க்க வற்புறுத்திய நடன இயக்குனர்

28 ஜனவரி 2020, 04:13 PM

தன்னை ஆபாச படங்கள் பார்க்க கூறி வற்புறுத்துவதாகவும், தனது சம்பளத்தில் இருந்து கமிஷன் கேட்டதாகவும் 33 வயது பெண் ஒருவர் பிரபல பாலிவுட் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியா மீது அம்போலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், நடன இயக்குனர் ஆச்சாரியா ஆபாச படங்களை போட்டு காண்பித்து தன்னை பார்க்குமாறு வற்புறுத்துகிறார்.

தான் வேண்டாம் என்று சொல்லியும் அவர் மீண்டும் மீட்டும் தன்னை வற்புறுத்துவதாகவும்,

தனது வருமானத்தில் இறுத்து தனக்கு கமிஷன் கொடுக்கவேண்டும் என அவர் தன்னை தொல்லை செய்வதாகவும் புகாரில் கூறியுள்ளார்.

இவர் மீது தன் நற்பெயரை கெடுத்ததாக நடிகை தனுஸ்ரீ தத்தா இதற்கு முன் கடுமையாக குற்றம்சாட்டி இருந்ததும் குறப்பிடத்தக்கது.