சண்டைக்கு தயாரான சந்தானம்

22 ஜனவரி 2020, 04:16 PM

சந்தானம் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு',  'தில்லுக்குதுட்டு 2 ' A 1 ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் சில படங்கள், படப்பிடிப்பு முடிவடைந்தும் ஒரு சில சர்ச்சைகளால் வெளியாகாமல் உள்ளது.

சந்தானம் தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்களில் காமெடி கலந்த ஹீரோ கதாபாத்திரத்தை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். இப்படி பட்ட படங்கள் ரசிகர்களால் வாவேர்க்கப்பட்டாலும், ஒரே மாதிரி நடிப்பதாக சில கருத்துக்களும் எழுந்தது.

எனவே தற்போது அதிரடி முடிவு எடுத்துள்ளார் சந்தானம். அதன்படி அடுத்ததாக A 1  படத்தை இயக்கிய இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிக்க உள்ள அடுத்த படத்தில் 'கேங்ஸ்டார்' கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் சந்தானத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அதிக அளவில் இடம்பெற உள்ளதாகவும், இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது. நார்த் மெட்ராஸ் பையனாக ஆக்ஷனில் சந்தானம் பின்னி பெடல் எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.