மலையாளத்தில் காஜல்!

17 ஜனவரி 2020, 01:04 PM

கமலுடன் ‘இந்தியன்- 2’ படத்தில் நடிக்கிறார் காஜல் அகர்வால். இதையடுத்து தெலுங்கு, இந்தியில் தலா ஒரு படத்தில் நடித்து வரும் அவர் மீண்டும் தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மலையாள நடிகர் துல்கர் சல்மான் தமிழில் நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். காதல் கதையில் உருவாகும் இந்த படம் மலையாளத்திலும் வெளியாகும் என்பதால் இப்படம் மூலம் முதன் முறையாக மலையாள சினிமாவில் கால் பதிக்கிறார் காஜல்.