ஸ்பெஷல் கவனிப்பு!

17 ஜனவரி 2020, 01:03 PM

கொளுத்தும் கோடையை குதூகலமாக்க வருகிறது சூர்யாவின் ‘சூரரைப் போற்று’. சூர்யாவின் முந்தைய படங்களான ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘என்ஜிகே’, ‘காப்பான்’ ஆகியவற்றுக்கு இல்லாத ஸ்பெஷல் கவனிப்பு இதற்கு உண்டு. காரணம், ‘இறுதிச் சுற்று’ சுதா கொங்கரா + சூர்யாவின் காம்பினேஷன்! சூர்யாவின் ஜோடியாக ‘சர்வம் தாளமயம்’ அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். ரஜினியின் நெருங்கிய நண்பரான மோகன்பாபு, நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த படம் வழியாக தமிழுக்கு வருகிறார். ‘‘ஐநுாறு படங்களுக்கு மேல் நடித்த உங்களுடன் இணைந்து நடிப்பதில் மகிழ்கிறேன். உங்களிடம் நிறைய கற்றுக்கொள்வேன்...’’ என சூர்யா நெகிழ்ந்துபோய் அவரிடம் சொல்லியிருக்கிறார். காமெடிக்கு கருணாஸ். தவிர ஜாக்கி ஷெராப், பரேஷ் ராவல் என பாலிவுட் நட்சத்திரங்கள் அதிகம் உள்ளனர்.