ரவுடியாகிய ‘யோகி’ பாபு!

12 டிசம்பர் 2019, 07:26 PM

பெரிய பெரிய ஹீரோக்கள்தான் ரொமான்டிக் ரவுடியாக நடிப்பார்கள். அந்த வரிசையில் ‘யோகி’ பாபுவும் ரொமான்டிக் ரவுடியாக நடித்துள்ள படம் ‘50/50.’ இதனை கிருஷ்ணசாய் இயக்கி உள்ளார். ‘யோகி’ பாபுவுடன், டாக்டர். சேது, நந்தா சரவணன், மயில்சாமி, சாமிநாதன், மதன்பாப் என்று ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளது. பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ளார். தரண் இசையமைத்துள்ளார். லிபி சினி கிராப்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படம் பற்றி இயக்குனர் கிருஷ்ணசாய் கூறியதாவது:– ‘‘சமீபத்தில் வெளியான ‘50/50’ திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஒலித்து கொண்டு இருக்கின்றன. படத்தில் மொத்தம் 6 பாடல்கள், அதிலும் குறிப்பாக ‘யோகி’ பாபு பாடும் ‘கோலமாவ் கோகிலா’ என்ற பாடலை ‘சூப்பர் சிங்கர்’ புகழ் பூவையார் பாடியுள்ளார். படமும் சிறப்பாக வந்துள்ளது. திகில் கலந்த முழுநீள நகைச்சுவை படமாக உருவாகி உள்ளது.’’