துப்பறியும் மகேஷ்!

12 டிசம்பர் 2019, 07:23 PM

‘அங்காடி தெரு’ மகேஷ் -– கேரள புது வரவான கல்யாணி நாயர் இணைந்து நடிக்கும் படத்தின் பெயர் ‘நங்கூரம்.’ இதில் மேலும் ரேகா, ‘நிழல்கள்’ ரவி, பொன்னம்பலம், ‘மகாநதி’ சங்கர் உட்பட பலர் நடிக்கிறார்கள்.

‘‘சுமார் 35 வயதிலிருந்து 40 வயதிற்குள் இருக்கும் பெண்களை குறிவைத்து கொலைகள் நடைபெறுகின்றன. அந்த கொலைகளுக்கான காரணங்களை போலீஸ் அதிகாரியாக வரும் ‘அங்காடி தெரு’ மகேஷ் மிக நுட்பமாக துப்பறிந்து கண்டுபிடிக்கும்  முயற்சியில் ஈடுபடுகிறார். இதில் அவருக்கு பல திசைகளிலிருந்தும் எதிர்ப்பு வருகிறது. அந்த எதிர்ப்புகளை மீறி மகேஷ் கண்டுபிடித்தாரா? கொலைக்கான காரணம் என்ன? இதற்கு ‘நங்கூரம்’ பதில் சொல்லும்’’ என்கிறார் இதன் இயக்குநர் ஏ.எஸ். மைக்கேல் சிவன்.

இவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையும் அமைத்துள்ளார். இவர் இதுவரை 125 திரைப்படங்களுக்கு மேல் தமிழில் மொழிமாற்றம் செய்து வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.