கை கொடுக்குமா...

10 டிசம்பர் 2019, 04:08 PM

‘காத­லில் சொதப்­பு­வது எப்­படி’ படத்­தில் இரண்­டா­வது நாய­கி­யாக அறி­மு­க­மா­ன­வர் ஐஸ்­வர்யா மேனன். அதன் பிறகு ‘தீயா வேலை செய்­ய­ணும் குமாரு,’ ‘தமிழ்­ப­டம் 2,’ ‘வீரா,’ ‘நேர் எதிர்’ படங்­க­ளில் நடித்­தார். அழ­கும், திற­மை­யும் இருந்­தும் சரி­யான வாய்ப்­பின்றி இருந்­தார்.

இந்­நி­லை­யில் ஹிப் ஆப் ஆதி இசை­ய­மைத்து நடிக்­கும் ‘நான் சிரித்­தால்’ படத்­தின் நாய­கி­யாகி இருக்­கி­றார். இதனை ராணா என்ற புது­மு­கம் இயக்­கு­கி­றார். அவனி மூவீஸ் சார்­பில் சுந்­தர்.சி தயா­ரிக்­கி­றார். இந்த படம் ஐஸ்­வர்யா மேன­னுக்கு கை கொடுக்­குமா என்­பதை பொறுத்­தி­ருந்து பார்க்க வேண்­டும்.