காரணமில்லாமல் நடிக்க மாட்டேன்!

10 டிசம்பர் 2019, 04:07 PM

‘‘‘வெட்­டிங் கெஸ்ட்’ படத்­தில் நான் நிர்­வா­ண­மாக நடித்­ததை பார்த்­து­விட்டு ஒரு சிலர் என்­னி­டம் விலை­மாது வேடத்­தில் நடிக்க வேண்­டும், பலாத்­கா­ரத்­தால் பாதிக்­கப்­பட்ட பெண்­ணாக நடிக்க வேண்­டும் என்று கேட்­கின்­ற­னர்.

ஸ்கிரிப்­டில் அதற்­கான எந்­த­வொரு நியா­ய­மும் சொல்­லப்­ப­டா­மல் நடிக்க கேட்­ட­தால் அவற்றை ஏற்க மறுத்­து­விட்­டேன். ‘வெட்­டிங் கெஸ்ட்’ படம் சர்­வ­தேச பார்­வை­யா­ளர்­க­ளுக்­காக உரு­வாக்­கப்­பட்­டது. அதில் நிர்­வாண காட்­சி­யில் நடிப்­ப­தற்கு ஒரு கார­ணம் இருந்­தது. அந்த காட்சி தவிர படத்­தில் நிறைய அழ­கான காட்­சி­கள் இருந்­தன. எந்த கார­ண­மும் இல்­லா­மல் நெருக்­க­மான காட்­சி­க­ளில் எப்­படி நடிக்க முடி­யும்?’’ இப்­படி கறா­ராக சொல்­ப­வர் ‘கபாலி’ புகழ் ராதிகா ஆப்தே.