நிவின் பாலி ஜோடியாக ‘அருவி’ நாயகி!

10 டிசம்பர் 2019, 04:05 PM

அருண் பிரபு புரு­ஷோத்­த­மன் இயக்­கத்­தில் வெளி­யான ‘அருவி’ படத்­தில் ஹீரோ­யி­னாக  நடித்த அதிதி பாலன், அதற்கு பிறகு தன்னை தேடி வந்த வாய்ப்­பு­களை, கதை  சரி­யில்லை மற்­றும் அந்த கதை­யில் தனது கேரக்­டர் சரி­யில்லை என்று சொல்லி,  எந்த படத்­தி­லும் நடிக்­கா­மல் காலம் கடத்­தி­னார்.

இந்­நி­லை­யில், மலை­யா­ளத்­தில்  நிவின் பாலி ஜோடி­யாக நடிக்க வந்த அழைப்பை ஏற்­றுக்­கொண்ட அவர், சர­ள­மாக  பேசு­வ­தற்­காக மலை­யா­ளம் கற்று வரு­கி­றார். லிஜு கிருஷ்ணா இயக்­கும்  இப்­ப­டத்­துக்கு ‘பட­வெட்டு’ என்று பெய­ரி­டப்­பட்­டுள்­ளது. தொடர்ந்து புதுப்­பட வாய்ப்பு பெறு­வ­தற்­காக, மற்ற நடி­கை­களை போல் கிளா­மர் போட்­டோ­செ­ஷன் நடத்தி, அந்த போட்­டோக்­களை இயக்­கு­னர்­க­ளுக்கு அனுப்பி வாய்ப்பு கேட்­கி­றா­ராம் அதிதி.