ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 11–12–19

10 டிசம்பர் 2019, 04:02 PM

தாயாரின் மரணம்!

(சென்ற வார தொடர்ச்சி...)

இளை­ய­ராஜா தன்­னைத்­தானே சுய அல­சல் செய்து கொள்­வ­தில் அவ­ருக்கு ஈடு­பாடு அதி­கம். “நான் இசைப்­பணி தொடங்­கு­வ­தற்கு முன்­னும் பின்­னும் கிரா­மத்து பாம­ரன்­தான்.ஆனால், டியூன்­களை உரு­வாக்க வேண்­டும் என்று அமர்ந்­தால் சங்­கீ­தம் என்­னுள் பெருக்­கெ­டுக்­கி­றது. அது என் செய­லல்ல. அம்­பா­ளின் கருணை” என்­பார் ராஜா.

* அந்த மாபெ­ரும் இசை மேதை ஆரம்­பத்­தில் இளை­ய­ரா­ஜாவை தமக்­குப் போட்­டி­யாக நினைத்து ஆவே­சப்­பட்­டார். காலம் உண்­மையை உணர்த்­தி­யது.  அந்த பெரி­ய­வர் இளை­ய­ரா­ஜா­வின் இசை ஆற்­றலை உணர்ந்­தார். மதித்­தார். ஒரு நாள் இளை­ய­வர் பெரி­ய­வ­ரின் பாதம் தொட்டு வணங்­கி­னார். ராஜா­வால் வணங்­கப்­பட்ட அந்த இசை மேதை எம்.எஸ். விஸ்­வ­நா­தன். ராஜா­வின் மான­சீக குரு. பின்­னர் இந்த இரு இசை மேதை­க­ளும் இணைந்து ‘மெல்­லத் திறந்­தது கதவு’, ‘செந்­த­மிழ்ப்­பாட்டு’ உட்­பட சில படங்­க­ளுக்­குத் தங்­கள்  இசை­நீரை பாய்ச்சி அதன் வளத்­துக்­குப் பெருமை சேர்த்­த­துண்டு.

* நடி­க­ரும் தயா­ரிப்­பா­ள­ரு­மான சங்­கிலி முரு­கன் தொடக்­கத்­தில் சொந்­த­மாக நாட­கக் கம்­பெனி நடத்­திக் கொண்­டி­ருந்­த­வர். அந்­தக் காலத்­தில் அவ­ரது கம்­பெனி நாட­கங்­க­ளுக்கு ராஜையா இசை­ய­மைத்­தது உண்டு. இந்த அறி­முக உரி­மை­யு­டன் பின்­னா­ளில் ராஜா­வி­டம் சென்று சொந்­த­மா­கப் படம் தயா­ரிக்­கும் ஆசை­யைச் சொன்­னார். ராஜா அந்த படத்­துக்கு இசை­ய­மைக்­கச் சம்­ம­தித்­த­தோடு, அந்த படம் வளர்ந்து முடிய அனைத்து உத­வி­க­ளை­யும் செய்­தார். இப்­படி சங்­கிலி முரு­க­னின் முதல் இரண்டு தயா­ரிப்­பு­கள் உரு­வாகி வெற்­றி­ய­டை­ய­வும், அவர் ஒரு தயா­ரிப்­பா­ள­ராக காலூன்­ற­வும் பின்­ன­ணி­யில் நின்­ற­வர் இசை­ஞானி.

* ராஜை­யா­வுக்கு தன் அன்னை மீது பாசம் அதி­கம். அதே­போல அன்­னைக்­கும். அன்னை சின்­னத்­தாயி அம்­மாள் சென்­னை­யில் இருந்­த­போது, அவ்­வப்­போது மூத்த மகன் பாஸ்­கர், கடைக்­குட்டி கங்கை அம­ரன் வீட்­டுக்­குப் போவார். ஆனால், தங்­கு­வது ராஜா­வின் வீட்­டில் மட்­டும்­தான். அம்மா தங்­கள் வீட்­டில் ஏன் தங்­கு­வ­தில்லை என்று ஒரு நாள் கார­ணம் கேட்­டார் கங்கை அம­ரன். அதற்கு அம்மா சொன்­னா­ராம்...

‘‘ராஜா இன்­னும் குழந்­தை­யா­கவே இருக்­கான். காலை­யில் அவன் வேலைக்­குப் போகும்­போது நான் கை அசைச்சு ‘டாட்டா’ காட்­ட­ணும். அதே மாதிரி சாயந்­த­ரம் ராஜா வீட்­டுக்கு வரும்­போ­தும் நான் இருக்­க­ணும். இல்­லேன்னா அவன் வாடிப்­போ­றான்”. இப்­படி பாசம் பொங்­கச் சொன்­னார் அம்மா.

அந்த அன்பு தாய், கடைசி காலத்­தில் நோயில் கிடந்து துடித்­த­போது, துடித்­துப்­போன ராஜா நான்கு டாக்­டர்­கள், இரண்டு நர்­சு­களை ஏற்­பாடு செய்து, தொடர்ந்து தனது தாயா­ரைக் கவ­னிக்­கச் செய்­தார். ஆனா­லும், மர­ணம் அந்த அன்பு அன்­னையை அழைத்­துக்­கொண்­டது. அப்­போது உறைந்­து­போன ராஜா­வின் கண்­ணீர், இப்­போ­தும் தனி­மை­யில் ஈர­மா­கக் கசி­கி­றது.

“என் தாய் இன்­னும் கோவிலை

காக்க மறந்­துட்ட பாவி­யடி கிளியே”

என்று தான் பாடிய பாட­லில் அன்­னை­யின் அரு­மையை பிரிவை, எழுதி பாடி­னார் ராஜா. இது போன்று தாம் எழுதி பாடிய பல பாடல்­க­ளில் தாய்­மை­யின் மகத்­து­வத்தை எடுத்­து­ரைத்­துள்­ளார். ராஜா­வி­னால் ‘அம்மா’ என்ற தெய்­வீக உரு­வத்தை பாடல்­க­ளாக பெற்­றது தமிழ்த்­தி­ரை­யு­ல­கம்.