‘ஜீவி’ நாயகனின் புதிய படம்!

10 டிசம்பர் 2019, 03:56 PM

சமீ­பத்­தில் வெளி­வந்த 'ஜீவி' படத்­தில் நடித்­தி­ருந்த  வெற்றி, அடுத்து நாய­க­னாக நடிக்க ஜெ.என். சினி­மாஸ் சார்­பில் பார்த்­த­சா­ரதி தயா­ரிக்­கும் புதிய படத்தை குரு ராமா­னு­ஜம் இயக்­கு­கி­றார். இவர் ‘கழுகு’ படத்­தின் இயக்­கு­னர் சத்ய சிவா­வி­டம் அசோ­சி­யேட் இயக்­கு­ன­ராக பணி­பு­ரிந்­த­வர். இப்­ப­டத்தை சமூக விழிப்­பு­ணர்வு மற்­றும் கமர்­ஷி­யல், சென்­டி­மென்ட் கலந்த த்ரில்­லர் பட­மாக இயக்­கு­கி­றார். வெற்றி நாய­க­னாக நடிக்­கி­றார் இவ­ருக்கு ஜோடி­யாக தியா மயூ­ரிகா நடிக்­கி­றார். குணச்­சித்­திர பாத்­தி­ரத்­தில் மாரி­முத்து நடிக்க, ‘கே.ஜி.எப்’ படத்­தில் வில்­ல­னாக நடித்த ராமச்­சந்­திர ராஜு இப்­ப­டத்­தி­லும் வில்­ல­னாக நடிக்­கி­றார். மற்ற நடி­கர் –- நடி­கை­கள் விவ­ரம் விரை­வில் அறி­விக்­கப்­ப­டும் என்­கி­றார் இயக்­கு­னர் குரு ராமா­னு­ஜம். இதன் படப்­பி­டிப்பை இயக்­கு­னர் கே. பாக்­ய­ராஜ் தொடங்கி வைத்­தார்.