சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 421 – எஸ்.கணேஷ்

04 டிசம்பர் 2019, 02:23 PM


நடி­கர்­கள் : சித்­தார்த், ஹன்­சிகா மோத்­வானி, சந்­தா­னம், கணேஷ் வெங்­கட்­ராம், தேவ­தர்­ஷினி மற்­றும் பலர். இசை : சி. சத்யா, ஒளிப்­ப­திவு : கோபி அமர்­நாத், எடிட்­டிங் : ப்ரவீண், ஸ்ரீகாந்த், தயா­ரிப்பு : யுடிவி மோஷன் பிக்­சர்ஸ், வச­னம் :    நலன் குமா­ர­சாமி, வெங்­கட்­ரா­க­வன், கதை, திரைக்­கதை, இயக்­கம் : சுந்­தர் சி.

கூட்­டுக் குடும்­பத்­தில் வாழும் குமார் (சித்­தார்த்) சாப்ட்­வேர் இன்­ஜி­னி­ய­ராக வேலை பார்க்­கி­றான். இவ­னது சகோ­த­ரி­கள் உட்­பட குடும்­பத்­தில் அனை­வ­ரும் தலை­மு­றை­யாக காதல் திரு­ம­ணம் செய்­த­வர்­கள். ஆனால், குமாரோ டீனேஜ் பரு­வத்­தி­லி­ருந்தே கசப்­பான அனு­ப­வங்­க­ளால் பாதிக்­கப்­பட்டு பெண்­க­ளோடு பேசு­வ­தற்கே கூச்­சப்­ப­டு­கி­றான். தனது அலு­வ­ல­கத்­தில் புதி­தாக வேலைக்­குச் சேரும் சஞ்­ச­னா­வின் (ஹன்­சிகா மோத்­வானி) மேல் காத­லா­கி­றான். தனது காதலை சொல்ல தைரி­யம் இல்­லா­மல் நோக்­கி­யா­வின் (சந்­தா­னம்) உத­வியை நாடு­கி­றான். பெண்­களை கவர்­வது எப்­படி, அவர்­க­ளது காதலை பெறு­வது எப்­படி என்று காத­லர்­க­ளுக்கு ஐடி­யாக்­களை வழங்கி அவர்­களை சேர்த்து வைப்­ப­தையே தனது தொழி­லாக செய்­யும் நோக்­கி­யா­வும் குமா­ருக்கு உதவ சம்­ம­திக்­கி­றான்.

சஞ்­ச­னா­வு­டன் குமார் நட்­பா­வ­தற்கு ஐடி­யாக்­கள் தரும் நோக்­கியா, அவ­ளது பாஸ் ஜார்­ஜு­டன் (கணேஷ் வெங்­கட்­ராம்) அவளை சேர்த்து கிசு­கி­சுக்­களை பரப்­பு­கி­றான். இத­னால் சஞ்­சனா ஜார்­ஜு­டன் பழ­கு­வதை நிறுத்­து­கி­றாள். குமார் சஞ்­ச­னா­வி­டம் காதலை சொல்­லப் போகும் நேரத்­தில், ஜார்ஜ் சஞ்­ச­னா­வி­டம் காதலை தெரி­விக்­கி­றான். சஞ்­ச­னா­வும் காதலை ஏற்­றுக்­கொள்ள குமார் மன­மு­டை­கி­றான். நோக்­கி­யா­வும், குமா­ரும் திட்­ட­மிட்டு இரு­வ­ரை­யும் பிரிக்­கி­றார்­கள். குமா­ரது குடும்­பத்­தி­ன­ரும் அவ­னது காத­லுக்கு ஆத­ர­வ­ளிக்­கி­றார்­கள். சஞ்­ச­னா­வும், குமா­ரும் ஒன்று சேரும்­போ­து­தான் நோக்­கி­யா­வுக்கு சஞ்­சனா தனது சகோ­தரி என்ற உண்மை தெரி­ய­வ­ரு­கி­றது. அத­னால் சேர்த்து வைத்த அவனே அவர்­களை பிரிக்க முயற்­சிக்­கி­றான்.

நோக்­கி­யா­வி­டம் முன்பு கற்­றுக்­கொண்ட ஐடி­யாக்­களை வைத்து சஞ்­ச­னா­வின் மனதை மாற்ற திட்­டம் போடும் குமார், தனது குடும்­பத்­தி­ன­ரின் ஒத்­து­ழைப்­பு­டன் அதில் ஜெயிக்­கி­றான். சஞ்­ச­னா­வி­டம் நடந்த உண்­மை­களை எடுத்­துக்­கூறி மன்­னிப்­புக் கேட்­கும் குமா­ரின் உண்­மை­யான காதலை புரிந்து சஞ்­ச­னா­வும், நோக்­கி­யா­வும் மனம் மாறு­கி­றார்­கள்.